நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயதாகிறது. அவருக்கு எப்போது திருமணம் என்று தான் கடந்த பல வருடங்களாக எல்லோரும் கேட்டு வந்தார்கள்.
அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக நேற்று விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு அமைந்தது.
தன்ஷிகா நடித்து இருக்கும் யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திருமண தேதியை அறிவித்து, அனைவரும் தங்களை வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இனி நடிப்பாரா..
மேடையில் பேசிய விஷால், 'யோகி டா ட்ரைலரை பார்க்கும்போது விஜயசாந்திக்கு அடுத்தபடியாக தன்ஷிகா தான் ஆக்ஷன் காட்சிகளில் இப்படி மிரட்டி இருக்கிறார். ஒவ்வொரு கிக்கும் தலைக்கு வருகிறது.'
'திருமணத்திற்கு பிறகு தன்ஷிகா தொடர்ந்து நடிப்பாரா என கேட்கிறார்கள். கண்டிப்பாக நடிப்பார். அவர் திறமையை நான் பூட்டி வைக்கமாட்டேன்' என விஷால் மேடையிலேயே கூறி இருக்கிறார்.
அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விஷால் கண்டிஷன் போட்டிருக்கிறார், திருமணத்திற்கு பின் தன்ஷிகா தொடர்ந்து நடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.