சலார் வசூலுக்கு வந்த சிக்கல்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி முடிவு? கடும் கோபத்தில் ரசிகர்கள்
கேஜிஎப் 2 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் அடுத்து இயக்கி இருக்கும் படம் சலார்.
பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
PVR, INOX-ல் சலார் ரிலீஸ் இல்லை?
சலார் படம் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், 21ம் தேதி ஷாருக் கான் நடித்த Dunki படம் வெளியாகிறது.
வட இந்தியாவில் இரண்டு படங்களுக்கும் PVR மற்றும் INOXல் சமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. அதனால் தென்னிந்தியாவிலும் அந்த இரண்டு மல்டிப்ளெக்ஸ் செயின் தியேட்டர்களில் சலார் படத்தை திரும்பபெற தயாரிப்பாளர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அதனால் சலார் வசூலுக்கு பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #BoycottPVRInox என தற்போது பிரபாஸ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.