விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டாரா.. நான் அப்படி சொல்லவே இல்லை: SJ சூர்யா விளக்கம்
நடிகர் எஸ்ஜே சூர்யா சமீப காலமாக வில்லன் ரோல்களில் கலக்கி வருகிறார். அவர் நடித்த மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் ஆனாது. அதில் போலீஸ் ரோலில் அதிகம் வில்லத்தனத்துடன் அவர் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்ஜே சூர்யா. வரும் மே 13ம் தேதி டான் படம் வெளியாகும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக SJ சூர்யா பேட்டி அளித்து இருக்கிறார்.

"விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார்" என அவர் கூறியதாக அந்த வார இதழின் ட்விட்டர் கணக்கில் வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதை பார்த்து ஷாக் ஆன SJ சூர்யா விளக்கம் கொடுத்து உள்ளார்.
"தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு ஒரு ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கிறார்கள், அதே போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுக்கிறார்கள்" என்று தான் சொன்னேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"நான் சொன்னது இதுதான், இப்படி ஒரு தலைப்பை எதிர்பார்க்கவில்லை" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.