ஆஸ்கார் சர்ச்சைக்கு பின் மனைவியை விவாகரத்து செய்யும் வில் ஸ்மித்? திடீரென இந்தியா வருகை
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் தனது மனைவி பற்றி கிண்டலடித்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடையேறி தாக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் தான் சில நாட்களுக்கு பேசுபொருளாக இருந்தது. வில் ஸ்மித் நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு 10 வருடங்கள் அகாடமி தடை விதித்து இருக்கிறது. அதனால் அவர் இனி ஆஸ்கார் விழாக்களில் கலந்துகொள்ள முடியாது.
இந்நிலையில் வில் ஸ்மித் அவரது மனைவி ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்கிறார் என கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. அது நடந்தால் வில் ஸ்மித் அவரது $350 மில்லியன் சொத்தில் பாதியை அவருக்கு கொடுக்க வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் வில் ஸ்மித்
இந்நிலையில் இன்று வில் ஸ்மித் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அவர் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அவர் 2019ற்கு பிறகு தற்போது தான் இந்தியா வருகிறார்.
முன்பு போல அவர் ஹிந்து ஆன்மீக தளங்களுக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்: பெண்ணொருவர் சந்தித்த வித்தியாசமான அனுபவம் News Lankasri