நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 வருடம் தடை! ஆஸ்காரில் நடிகரை அறைந்ததற்கு தண்டனை அறிவிப்பு
ஆஸ்கார் விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவி பற்றி காமெடி செய்த பேசிய கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இது மிகப்பெரிய சர்ச்சை ஆனது.
அகாடமியில் இருந்து ராஜினாமா
தான் ஆஸ்கார் விருது விழாவில் இப்படி நடந்துகொண்டது பற்றி மன்னிப்பு கேட்டிருந்தார் வில் ஸ்மித். ஆனால் தான் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என் கூறிய அவர் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதால் இனி வில் ஸ்மிதா ஆஸ்கார் விருது வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாது.
10 வருட தடை
இந்நிலையில் அகாடமியின் disciplinary review இன்று நடைபெற்றது. அதில் வில் ஸ்மித் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அதனால் அவருக்கு 10 வருடங்கள் அகாடமியில் தடை விதிப்பதாக அறிவித்து உள்ளனர்.
10 வருடங்களுக்கு அவர் ஆஸ்கார் விருது விழா மற்றும் அகாடமியின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

நிறுத்தப்பட்ட படங்கள்
வில் ஸ்மித் ஆஸ்கார் மேடையில் மற்றொரு நடிகரை அறைந்தது மிகப்பெரிய சர்ச்சை ஆனதை தொடர்ந்து அவர் தற்போது நடிக்கும் படங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
ஒருநிமிட கோபத்தால் வில் ஸ்மித் அவரது கெரியரை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பீஸ்ட் இந்த ஹாலிவுட் படம் மாறி தான் இருக்கும் ! - இயக்குனர் நெல்சன் பகிர்ந்த தகவல்..
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri