ரூ. 1000 கோடி மொத்த வசூல், சாதனை படைப்பாரா சூர்யா
சூர்யா
நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடித்து நொறுக்கி வருகிறார்.

ஏற்கனவே கருப்பு புயல் வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் வசூல் விருந்து வைத்தது. அதை தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் க்ளாஸாக இருந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

கருப்பு + விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சேர்த்து ரூ. 560 கோடிகள் வசூலை தாண்ட, சூர்யா நடிப்பில் சீன் படம் இந்த தீபாவளிக்கு வரவுள்ளது, இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளிவந்து மிகப்பெரிய ரீச் ஆகியுள்ளது.
ரூ. 1000 கோடி
இந்நிலையில் சீன் படம் ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் கேரளாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இப்படம் ரூ. 460 கோடி வசூல் செய்தால் ஒரே ஆண்டில் ரூ 1000 கோடி வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை சூர்யா பெறுவார்.

இதுவரை எந்த ஒரு தமிழ் ஹீரோவும் ஒரே வருடத்தில் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை, ரஜினிகாந்த் 2.0+ காலா சேர்ந்து ரூ. 860 கோடி, விஜய் லியோ+வாரிசு சேர்த்து ரூ. 900 கோடி வசூலை கொடுத்தனர், இந்த ரூ. 1000 கோடி சாதனையை சூர்யா இந்த 3 படங்கள் மூலம் கொடுப்பாரா? பார்ப்போம்.