சென்னை திரும்பிய விஜய் கைது செய்யப்படுவாரா? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்
கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தை பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கும் சூழலில் மொத்த நாடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் உடனடியாக கரூரில் இருந்து கிளம்பி திருச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.
விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசவில்லை. சென்னை வந்த பிறகும் பத்ரிக்கையாளர்களை சந்திக்காமல் நேராக காரில் ஏறி சென்ற விஜய் பனையூரில் இருக்கும் வீட்டுக்கு சென்றார்.
அவர் வீட்டுக்கு வெளியேவும் அதிகம் பத்ரிக்கையாளர்கள் கூடி இருந்த நிலையில், அவர்களிடமும் பேசாமல் விஜய் நேராக காரில் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
கைது செய்யப்படுவாரா?
39 பேர் பலியாக காரணமான இந்த சம்பவத்திற்காக நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து இருக்கிறார்.
"அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் கூறி இருக்கிறார்.