ஒரு முக்கிய சாதனையை செய்யத் தவறிய கமல்ஹாசனின் விக்ரம்- சென்னையில் மொத்த வசூல்
விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படமும் வெளியாகவில்லை, காரணம் என்ன என்பது நமக்கே தெரியும்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார், பின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இடையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட்டானார் ஆனால் படம் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, எப்போது மீண்டும் ஆரம்பமாகும் என தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். படம் கடந்த ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆகி பட்டய கிளப்பிறது.
உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது, பட்ஜெட் என்னவோ ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரை தான்.
சென்னை வசூல்
தற்போது படம் சென்னையில் இதுவரை ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளது, ஆனால் பாகுபலி 2 பட சென்னை வசூலை எட்டவில்லை. பாகுபலி 2 வசூலை எட்ட விக்ரம் படம் இன்னும் ரூ. 1 கோடி வசூலித்தால் தான் முடியும்.
ஆனால் சென்னையில் டாப் வசூல் செய்த படங்களில் விக்ரம் 3வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய்யின் யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலித்ததா?