குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில்
அஜித்தின் வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் யுவினா. அரண்மனை, கத்தி, காக்கி சட்டை போன்ற படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
தற்போது வளர்ந்துவிட்டதால் யுவினா படங்களின் மெயின் ரோல்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அஜித்துக்கு ஜோடியா நடிப்பீங்களா?
அஜித் உடன் ஒரு படத்தில் நடித்ததால் என்னை அதிகம் பேருக்கு தெரிகிறது என யுவினா கூறினார். அதன்பின் பத்திரிகையாளர் ஒருவர் 'மீனா ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாகி நடித்துவிட்டு, பிற்காலத்தில் ரொம்ப வருஷம் கழித்து அவருக்கே ஹீரோயினாக நடிச்சாங்க. அதேபோல அஜித் சாருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீங்களா, வேண்டாம் என சொல்வீங்களா?' என கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன யுவினா "காலம் ரொம்ப மாறிடுச்சு. நீங்க சொல்றது அந்த காலம். அந்த கேரக்டருக்கு அவங்க ஏற்ற மாதிரி இருந்ததால் பண்ணி இருப்பாங்க. இப்போது அதை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, அது சரியானது போலவும் தெரியவில்லை. அது இந்த ஜெனரேஷனுக்கு சரியாக இருக்காது" என கூறி இருக்கிறார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
