அபிஷன் ஜீவிந்த் 'வித் லவ்' படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
அபிஷன் ஜீவிந்த்
டூரிஸ்ட் பேமிலி என்கிற ஆகச்சிறந்த படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இது அவருடைய அறிமுக படம் ஆகும். முதல் படத்திலேயே இயக்குநராக மாபெரும் வெற்றி கண்ட அபிஷன் ஜீவிந்த், தற்போது வித் லவ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இயக்குநராக எப்படி முதல் படத்தில் மாபெரும் வெற்றி பெற்றாரோ, அதே போல் ஹீரோவாகவும் முதல் படத்தில் வெற்றியை சொந்தமாக்கியுள்ளார். வித் லவ் படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரிக்க, மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
வித் லவ் படத்தின் வசூல்
காதல் கதைக்களத்தில் அதுவும் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருந்த வித் லவ் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் அதிகரித்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் வித் லவ் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 13 நாட்களில் ரூ. 26.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.