25 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. பைனல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வித் லவ்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் அறிமுகமானார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றார்.

முதல் படத்திலேயே இயக்குநராக மாபெரும் வெற்றியை சொந்தமாக்கிய அபிஷன், உடனடியாக ஹீரோவாக களமிறங்கினார். இவர் ஹீரோவாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம்தான் வித் லவ்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இறுதி வசூல்
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், 25 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வித் லவ் திரைப்படம் உலகளவில் ரூ. 35 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. மேலும் இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri