விஜய் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் வித் லவ் திரைப்படம்.. வெளிவந்த புரோமோ வீடியோ
வித் லவ்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதை தொடர்ந்து வித் லவ் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க, அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் மட்டுமின்றி ஓடிடியிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தொலைக்காட்சியில் வித் லவ்
இந்த நிலையில், விரைவில் வித் லவ் திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான புரோமோ வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். ஆனால், தேதியையும், நேரத்தையும் குறிப்பிடவில்லை.

உங்க எல்லாருக்கும் பிடிச்ச அந்த Love Story.. 😍
— Vijay Television (@vijaytelevision) April 25, 2026
வித் லவ் - World Television Premiere | விரைவில்.. #WithLove #AbishanJeevinth #AnaswaraRajan #WorldTelevisionPremiere #VijayTV #VijayTelevision pic.twitter.com/p6uDjB6I3O