விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. அட இப்படி ஆகிருச்சே
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற தமிழ் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
with love
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் படத்திலேயே இயக்குநராக சாதித்துவிட்டார் என பலரும் பாராட்டினார்கள். இயக்குநராக வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது 'with love' என்கிற படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்துடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

டைட்டில்
இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் with love டைட்டில் குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். அதில், 'with love' படத்திற்கு விஜய் சாரின் 'ப்ரியமுடன்' படத்தின் டைட்டில்தான் முதலில் கேட்டோம். ஆனால், நாங்கள் தாமதாக அவர்களை அணுகியதால் எங்களுக்கு அந்த டைட்டில் கிடைக்கவில்லை. வேறொரு படத்திற்கு அந்த டைட்டிலை கொடுத்துவிட்டார்கள்" என கூறியுள்ளனர்.

இதற்கு முன் லவ் டுடே படம் விஜய்யின் பல பட தலைப்பில் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து ஒன்ஸ் மோர், யூத் ஆகிய விஜய்யின் பழைய படங்களின் தலைப்பை தற்போது புதிய படங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.