சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல்

By Kathick Mar 21, 2026 03:45 AM GMT
Report

அண்ணாமலையின் பிறந்தநாள்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, வீட்டுத் தலைவர் அண்ணாமலைக்கு 60-வது பிறந்தநாள். இதனை வீட்டிலுள்ள விஜயா, மனோஜ், ரவி ஆகியோர் மறந்துவிட்டனர். ஆனால், அண்ணாமலையின் நண்பர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வீட்டிற்கு வந்து அண்ணாமலைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். 

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial

ஆனால், அண்ணாமலையின் பிறந்தநாள் இன்று என யாருக்கும் தெரியவில்லையா என அவர் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். அதன்பின்தான் அண்ணாமலைக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial

இதே போல் முத்துவும் தனது தந்தையின் பிறந்தநாளை மறந்துவிட்டான் என நினைக்க, மேளதாளத்துடன் அண்ணாமலையின் பிறந்தநாளை முத்து கொண்டாடிவிட்டார். முத்து - மீனா இருவரும் அண்ணாமலைக்கும் விஜயாவிற்கும் புதிய துணி வாங்கி கொடுத்து அண்ணாமலைக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கேக் வெட்டி இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது டீம் கொடுத்த விளக்கம்

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது டீம் கொடுத்த விளக்கம்

குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த சமயத்தில், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அங்கு ரோகிணி வருகிறார். அவரை கடுமையாக திட்டி அங்கிருந்து அனுப்பிவிடுகிறார் விஜயா.

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial

தாலியை திருடிய பெண்

அண்ணாமலையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து, முத்து தனது புதிய Van-க்கு கோவிலில் பூஜை போடுகிறார். அங்கு முத்துவின் உறவினர்கள் அனைவரும் வந்து வாழ்த்துகிறார்கள். சீதாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial

அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சீதாவின் தாலியை திருடிவிட்டு அங்கிருந்து செல்கிறார். கழுத்தில் தாலி இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைகிறார் சீதா. தாலியை பறித்துவிட்டு ஓடும் அந்த பெண், வழியில் வரும் மீனாவை இடித்துவிட்டு செல்கிறார். சீதாவின் தாலியை திருடியது யார்? எதற்காக எப்படி செய்தார்? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

சீதாவின் தாலியை திருடிய பெண்.. யார் அவர்? சிறகடிக்க ஆசை சீரியல் | Woman Stole Sita Thali In Siragadikka Aasai Serial  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US