பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள World Of 'வேட்டுவம்' - An Introduction வீடியோ
World Of Vettuvam - An Introduction video: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ், சோபிதா ஆகியோர் நடித்துள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தின் Introduction வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வேட்டுவம்
அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, தங்களான் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் 'வேட்டுவம்'.

Sci-Fi ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், நடிகை சோபிதா துளிபாளா, கலையரசன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி மற்றும் செல்வா ஆர்.கே எடிட்டராக பணியாற்றியுள்ளனர். ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகிறது.
An Introduction
இந்த நிலையில், பலருடைய கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தின் An Introduction வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri