ரைட்டர் திரைவிமர்சனம்
கதைக்களம்
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிகிறார் சமுத்திரகனி. இவர் காவலர்களுக்கு தனி யூனியன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுவதால், அதிகாரிகள் சமுத்திரகனி மீது கோபப்பட்டு சென்னைக்கு மாற்றம் செய்கிறார்கள்.
சென்னைக்கு வேலைக்கு வரும் சமுத்திரகனிக்கு ரைட்டர் வேலை கொடுக்காமல் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரியை பார்த்து கொள்ளும் வேலை கொடுக்கிறார்கள்.
அப்போது சமுத்திரகனி கொடுக்கும் திட்டத்தால், ஹரியை பொய் வழக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் சமுத்திரகனி, ஹரியை பொய் வழக்கில் இருந்து மீட்க போராடுகிறார். இதில் சமுத்திரகனி வெற்றி பெற்றாரா? இல்லையா? ஹரி என்னவானார்..? என்பதே படத்தின் மீதிக்கதை..
படத்தை பற்றிய அலசல்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரகனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவர் அடி வாங்கும் போது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி. தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
சமுத்திரகனிக்கு அடுத்ததாக ஹரியின் நடிப்பு பாராட்டுக்குரியது. நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சுப்பிரமணி சிவா, பாசத்தால் நெகிழ வைத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் இனியா, நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதேபோல், ஜிஎம் சுந்தர் மகேஸ்வரி, லிசாவின் நடிப்பு படத்தை வெற்றி பாதைக்கு எடுத்து செல்கிறது. காவல்துறையினரை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிராங்களின் ஜேகப். காவல்துறையில் இருக்கும் அரசியல், பணி சுமை, ஜாதி என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
பிராங்களினின் நேர்த்தியான திரைக்கதைக்கு பெரிய பாராட்டுகள். இருந்தலும், முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கதையோடு பயணம் செய்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.
க்ளாப்ஸ்
சமுத்திரக்கனி, ஹரி நடிப்பு
பிராங்களின் ஜேகபின் இயக்கம்
கதைக்களம், வசங்கள்
பல்ப்ஸ்
முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்
மொத்தத்தில் ரைட்டர் சூப்பர்
3/5