யானை படத்தின் மொத்த வசூல்! வெற்றியா தோல்வியா.. ரிசல்ட் இதோ
அருண் விஜய்யின் யானை படத்தின் மொத்த வசூல் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
யானை
நடிகர் அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணியில் யானை படம் கடந்த ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் உடன் பிரியா பவானி ஷங்கர், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் உறவினர்கள் என்றாலும் இந்த படம் தான் அவர்கள் கூட்டணி சேரும் முதல் படம் என்பது குறிப்பிடதக்கது.
மொத்த வசூல்
தற்போது வந்திருக்கும் தகவல்களின் படி யானை படம் மொத்தமாக உலகம் முழுவதும் 25 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறதாம். அதில் தமிழ்நாட்டு வசூல் மட்டும் 20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளருக்கு ஷேர் மட்டும் 11 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த ப்ராஜெக்ட் ஆக இது மாறி இருக்கிறது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
