யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நக்ஷத்ராவின் புதிய தொடர்... எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?
யாரடி நீ மோகினி
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நக்ஷ்த்ரா.
கேரளாவை சேர்ந்த இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவர் சின்னத்திரை தயாரிப்பாளர் விஷ்வாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.
புதிய தொடர்
திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் கமிட்டாகி நடிக்காமல் இருந்த நக்ஷத்ரா மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.
Miracle Media தயாரிக்கும் புதிய தொடரில் நக்ஷத்ரா நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தொடர் சன் டிவியில் Non Prime Slotல் ஒளிபரப்பாக உள்ளதாம். மற்றபடி இந்த புதிய சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.