யாஷிகா ஆனந்த்துக்கு விபத்தால் பறிபோன மிக பிரம்மாண்ட வாய்ப்பு!

By Parthiban.A Jan 02, 2022 03:30 AM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பாப்புலர ஆனவர் யாஷிகா ஆனந்த். அவர் அதற்குப் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு அதிகம் கவனம் ஈர்த்தார். ஆனால் அதன் பிறகு ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். அதற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பின் பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு கடந்த வருடத்தில் நடந்த பிக் பாஸ் ஹிந்தி ஷோவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக ஆகஸ்ட் மாதம் அவர் செல்ல இருந்தார். ஆனால் ஜூலை மாத கடைசியில் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டது.

அதில் அவரது இடுப்பு, கால் உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போது தான் எழுந்து நடக்கவே ஆரம்பித்திருக்கிறார் அவர்.

கடந்த சில வாரங்களாக அவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவி ஷோ ஒன்றில் தான் கார் ஓட்டும் போது ஏற்பட்ட விபத்தில் பலியான தன்னுடைய தோழி பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி கண்ணீர் விட்டிருந்தார் யாஷிகா. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US