விபத்தில் சிக்கி படுத்தபடுக்கையில் இருக்கும் நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை- வெளிவந்த புகைப்படங்கள்
பிரபலங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடனே ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிடுவார்கள்.
நடிகர் ரஜினி அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்படிதான் நடிகை யாஷிகாவின் விபத்து செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, அவருடன் பயணித்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கால், முதுகெலும்பு என பல இடங்களில் யாஷிகாவிற்கு சர்ஜரி எல்லாம் நடந்தது, ஒரு 6 மாதங்களுக்கு அவர் எழுந்து நடக்க கூடாது என மருத்துவர்கள் கூறியதாக அவரே கூறியிருந்தார்.
தற்போது நடிகை யாஷிகா உடல்நலம் கொஞ்சம் சரியாக எழுந்து நடக்க முயற்சி செய்து வருகிறார். அவரது அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் சீக்கிரம் குணமடையுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.