யாத்திசை திரைவிமர்சனம்
படத்தின் தலைப்பு யாத்திசை, தென்திசை எனும் வார்த்தையை குறிப்பிடுகிறது. 7ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இக்கதையை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே. கணேஷ் தயாரித்துள்ளார்.
பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இப்படத்தின் ட்ரைலர் தான் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
ஏழாம் நூற்றாண்டில், பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழப் பேரரசும் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி கூட்டங்களும் துணை நிற்கிறது.
போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டிய பேரரசு, சோழ கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.
அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார்.
சொன்னபடியே ரணதீரனை வீழ்த்தி சோழ அதிகாரத்தை கையில் எடுத்தாரா கொதி? இல்லை பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. கொதியாக நடித்துள்ள சேயோன், ரணதீரனாக நடித்துள்ள சக்தி இருவரின் நடிப்பு சூப்பர். இவர்கள் இருவரும் முழு படத்தையும் தோளில் தாங்கி நிற்கிறார்கள்.
இயக்குனரின் கதை தேர்வு, திரைக்கதையை அமைத்த விதம் பக்கா. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், பெரிதாக தெரியவில்லை. VFX காட்சிகளில் குறை இருந்தாலும், படத்தின் பல பிளஸ் பாயிண்ட் அதை மறைத்துவிட்டது.
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மேக்கிங் செய்ய முடியும் என இயக்குனர் தரணி ராசேந்திரன் நிரூபித்து காட்டியுள்ளார். அதற்க்கு தனி பாராட்டு. செலவு செய்து பிரம்மாண்டத்தை காட்டாமல், தன்னுடைய மேக்கிங் மூலமாக பிரம்மாண்டத்தை காட்டியுள்ளார். முக்கியமாக படத்தின் வசனம்.
7ஆம் நூற்றாண்டு என்பதினால் அப்போது வாழ்ந்த மக்கள் பேசிய தமிழை படத்தில் வைத்துள்ளனர். இதனால் சில குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், அதை ஆய்வு செய்து சரியாக பயன்படுத்தியுள்ளனர். சண்டை காட்சிகள் அற்புதம். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டுகிறது. கலை இயக்கம் படத்திற்கு பலம்.
ஒப்பனை 7ஆம் நூற்றாண்டின் நம்பக தன்மையுடன் கண்முன் நிறுத்துகிறது. ஆடை வடிவமைப்புக்கு தனி பாராட்டுக்கள். ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டிங் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது.
பிளஸ் பாயிண்ட்
நடிகர்களின் நடிப்பு
கதைக்களம்
சண்டை காட்சி
ஒப்பனை, எடிட்டிங்
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் மாபெரும் பிரம்மாண்டம்
மைனஸ் பாயிண்ட்
சில இடங்களில் ஏற்படும் தொய்வு
VFX காட்சிகளில் குறை
7ஆம் நூற்றாண்டில் பேசிய தமிழ் படத்தில் இடம்பெறுவதால் ஏற்படும் குழப்பம்
மொத்தத்தில் யாத்திசை வியப்பூட்டும் பிரம்மாண்டம்
தனது மகனை கட்டியணைத்து அழும் நடிகை ராதிகா சரத்குமார்- ஏன் தெரியுமா?