கே.ஜி.எப் ஹீரோ யாஷின் இரு பிள்ளைகளையும் பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் யாஷ்.
இவர் நடிப்பில் தற்போது கே.ஜி.எப் 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி, வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.
இதில், யாஷுடன் இணைந்து, ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக தொடர்ந்து பல முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. விரைவில் இப்படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் யாஷ் தனது இரு பிள்ளைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் பாருங்க..