யாஷிகா ஆனந்திற்கு காத்திருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி, பட தயாரிப்பாளர்கள் எடுக்கவுள்ள முடிவு !
பிரபல நடிகை யாஷிகா, அவரின் தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார்கள்.
இதில் அவரின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்துள்ள யாஷிகா ஒரு சில அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனால் யாஷிகா ஆனந்தை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பட அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகா ஆனந்துக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்றும் யோசித்து வருகிறார்கள்.
இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
