தனது தோழி இறந்தது கூட அறியாத நடிகை யாஷிகா, அவரின் தாயார் உருக்கம்!

Yashika anand
By Jeeva Jul 26, 2021 06:40 PM GMT
Report

பிரபல நடிகை யாஷிகா அவரின் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில் விபத்துக்கு உள்ளனார்.

இதில் அவரின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சோனல் ஆனந்த் கூறியதாவது: “யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டர்-ல வச்சிருக்காங்கனு சொல்லியிருக்கோம்.

மேலும் மருத்துவர்கள் இது குறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். சிகிச்சைக்கு பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US