டாக்ஸிக் படுதோல்வி.. வலியுடன் பேசிய நடிகர் யாஷ்! என்ன சொன்னார் பாருங்க

By Parthiban A Sep 09, 2026 04:05 PM GMT
Report

கேஜிஎஃப் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் யாஷ். அவர் அடுத்து நடித்த டாக்ஸிக் படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார். அடல்ட் ஒன்லி படமாக உருவான அதை கீத்து மோகன்தாஸ் தான் இயக்கி இருந்தார்.

சமீபத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி ரிலீஸ் ஆன டாக்ஸி படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. அதனால் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்தது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளருக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட இருப்பதாகவும் தெரிகிறது.

ஓடிடி உரிமைக்காக முன்பு 150 கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் தர முன் வந்தன. ஆனால் ரிலீசுக்கு பிறகு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக தற்போது வெறும் 30 கோடி மட்டுமே தர ஓடிடி நிறுவனங்கள் ரெடியாக இருக்கிறார்கள்.

யாஸ் இந்த மிகப்பெரிய தோல்வி பற்றி வலியுடன் தன்னிடம் பேசியதாக அந்த படத்தில் பணியாற்றிய ஜெய்தேவ் மோகன் என்பவர் பேட்டி அளித்திருக்கிறார்.

டாக்ஸிக் படுதோல்வி.. வலியுடன் பேசிய நடிகர் யாஷ்! என்ன சொன்னார் பாருங்க | Yash Response To Toxic Negative Reviews

என்ன சொன்னார்?

அவரிடம் போனில் தான் பேசினேன். படம் ரிலீஸ் ஆன அன்று நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. நான் படத்தில் ஒரு மிகச்சிறிய பங்கு தான். எனக்கே வருத்தமாக இருந்தது.

அப்போது எனக்கு போன் செய்த யாஷ், 'இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. படம் முடிந்து விட்டது. ரிலீஸ் ஆகிவிட்டது. தற்போது மக்களிடம் விட்டுவிடு. இது அவர்களது விருப்பம். அடுத்த வேலையை பார்க்க வேண்டி இருக்கிறது' என யாஷ் கூறினார்.

அவர் எனக்கு ஆறுதல் சொல்வது போல பேசினாலும், அவரது குரலில் ஒரு வலி தெரிந்தது. கடந்த பல வருடங்களாக அந்த படத்திற்காக அவர் உழைத்திருக்கிறார். "நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டது. அவர் எவ்வளவு வருத்தத்தில் இருப்பார்!" என ஜெய்தேவ் கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US