தமிழ் பட இயக்குனரின் இயக்கத்தில் கே.ஜி.எஃப் யாஷ்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா
யாஷ்
ஒரு திரைப்படம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் திருப்பி போடும் என்பதற்கு முக்கிய காரணம் கே.ஜி.எஃப் தான்.
இப்படத்திற்கு முன் கன்னட திரையுலகில் மட்டுமே பிரபலமாக இருந்த ஹீரோ யாஷ் மற்றும் இயக்குனர் பிரஷாந்த் நீல் இருவரும் கே.ஜி.எஃப் ரிலீஸுக்கு பின் Pan இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார்கள்.
குறிப்பாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை கூட படைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றி படத்தை கொடுத்த பிறகும் கூட யாஷ் ஏன் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை என கேள்வி எழுந்தது.
அடுத்த படத்தின் இயக்குனர்
இந்நிலையில், யாஷ் அடுத்ததாக தமிழ் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பி.எஸ். மித்ரன் தான். ஆம், இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக யாஷை வைத்து தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
இதற்கான வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
