கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக நடிகர் யஷ் செய்த விஷயம்.. என்ன தெரியுமா?
யஷ்
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடித்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
தற்போது அவருடைய 19வது திரைப்படமான டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநரான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கிறது.
என்ன தெரியுமா?
தற்போது, கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதால் பெங்களூருக்கு அலைய வைக்க வேண்டாம் என்று டாக்ஸிக் படப்பிடிப்பையே மும்பைக்கு மாற்றுமாறு கூறியிருக்கிறார் யாஷ்.
இதனால், கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
