டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஹீரோ யாஷ்.. அதுவும் புதிய போஸ்டருடன்
யாஷின் டாக்சிக்
கே.ஜி.எப் 1 & 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் பான் இந்தியன் ஹீரோவாக மாறிவிட்டார் யாஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் டாக்சிக்.

இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் தான் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
ரிலீஸ் தேதி
பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஹீரோ யாஷ்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள யாஷ், 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி டாக்சிக் படம் வெளியாகும். மேலும் படம் வெளிவர இன்னும் 100 நாட்கள் உள்ளன என போஸ்டருடன் பதிவு செய்துள்ளார். இதோ அந்த அறிவிப்பு..
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
பிரெஞ்சு தம்பதி... பிரித்தானியாவில் தொடர்பு: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் News Lankasri