டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் கசிவு .. அதிர்ச்சியில் படக்குழுவினர்! அதிரடி முடிவு
யாஷ்
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் நடித்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 என்ற படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது அவருடைய 19வது திரைப்படமான டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கிறது.
கசிந்த புகைப்படம்
இந்த நிலையில் அந்த படத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தில் யாஷ் மற்றும் அவர் அருகில் ஒரு பெண் நிற்கும் காட்சி அது. மேலும் அந்த பெண் ஹுமா குரேஷி என்று கூறப்படுகிறது.
இது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், குறைவான ஆட்களை மட்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பயன்படுத்தவும், மேலும் செல்போன்களை கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.