யாஷ் ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்.. அவரை விட ஆறு வயது மூத்தவராமே
நடிகர் யாஷ் கேஜிஎப் படம் மூலமாக இந்திய அளவில் பாப்புலர் ஹீரோ ஆகிவிட்டார். கேஜிஎப் 2 படம் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இருப்பினும் யாஷ் தனது அடுத்த படத்தை நீண்ட காலம் அறிவிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதன் பின் Toxic என்ற படத்தை அறிவித்தார் அவர்.
கீது கோகன்தாஸ் இயக்கும் அந்த படம் வரும் 2025 ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோயின்
இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க ஹிந்தி நடிகை கரீனா கபூர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
கரீனா கபூர் இதில் நடிப்பது உறுதியானால், இது அவருக்கு முதல் தென்னிந்திய படமாக அமையும். மேலும் டாக்சிக் படத்தை பான் இந்தியா படமாக வெளியிட தான் இப்படி ஹிந்தி ஹீரோயினை படக்குழு தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
43 வயதாகும் கரீனா கபூர் யாஷை விட மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan