பிரம்மாண்ட தொகைக்கு விலைபோன யாஷ் 'டாக்சிக்' படம்.. இத்தனை கோடியா
நடிகர் யாஷ் கேஜிஎப் படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான ஹீரோவாகிவிட்டார். அவர் அடுத்து நடித்து வரும் டாக்சிக் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்தின் காட்சியை டீஸர் ஆக சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர், அதில் வரும் காட்சி சர்ச்சையாக மாறி இருந்தது.

பிரமாண்ட தொகை
தற்போது டாக்சிக் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை SVC நிறுவனத்தின் தில் ராஜு வாங்கி இருக்கிறார். அவர் 120 கோடி ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை வாங்கி இருக்கிறாராம்.
கன்னட படம் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் காந்தாரா படம் 100 கோடி ரூபாய்க்கு தெலுங்கில் விற்கப்பட்டு இருந்தது, அதை தற்போது டாக்சிக் முந்தி இருக்கிறது.
