திமுக அமைச்சருக்கு யாஷிகா ஆனந்த் பதிலடி! பிரதமர் மோடி பற்றியும் பெருமையாக பேசிய நடிகை
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மேலும் புகழ்பெற்றார். இருப்பினும் அந்த புகழ் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்று தரவில்லை.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா தனது தாறுமாறு கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பொன்முடி பேசும்போது 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார்' என கேள்வி எழுப்பி இருந்தார். இது வடநாட்டு மீடியாக்களில் பெரிய சர்ச்சையாக்கப்பட்டது. ஹிந்தி பேசுபவர்கள் எல்லோரையுமே அவர் பானி பூரி விற்பவர்கள் என சொல்லிவிட்டார் என பலரும் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். "ஒருவரது மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார். எல்லோரும் வாழ தேவையான பணம் சம்பாதிக்க தான் முயற்சி செய்கிறார்கள். யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்."
"டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார். பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்" என யாஷிகா குறிப்பிட்டு உள்ளார்.