பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக அழைப்பு வந்தது, ஆனால்?- யாஷிகா லைவ்வில் கூறிய பதில்
18 வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகையாக வலம் வந்தவர் யாஷிகா. பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு என்ற படம் மூலம் அறிமுகமானார்.
பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனார். அந்த நேரத்திலேயே பிக்பாஸ் வாய்ப்பு வர அங்கு சென்றார்.
யாஷிகா விபத்து
பிக்பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் கோர விபத்தில் சிக்கி தனது தோழியை இழந்தார். பின் 6 மாதம் படுத்த படுக்கையிலேயே இருந்த யாஷிகா இப்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் வாய்ப்பு
அதிகம் போட்டோ ஷுட்கள் செய்து பிஸியாக இருக்கும் யாஷிகாவிற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து லைவ் சேட்டில் ரசிகர்கள் ஒருவர் கேட்க அதற்கு யாஷிகா, ஆம், என்னை பிக் பாஸ் அல்டிமெட்டில் கலந்துகொள்ள கேட்டார்கள்.
ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது, மேலும், நான் 18 வயசு இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
கதாநாயகி இல்லாமல் உருவாகவுள்ள விஜய்யின் திரைப்படம்.. இயக்குனரின் அதிரடி