இப்படி ஒரு நபரை டேட் செய்ய மாட்டேன்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி ஓப்பனாக பேசிய யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் எல்லைமீறிய கவர்ச்சி காட்டும் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் மிக அதிகமானோர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
அவர்களுக்காகவே தொடர்ந்து அவர் கிளாமர் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்தில் வைரலாகவும் செய்கின்றன.
டேட்டிங்
சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன அவர் டேட்டிங் பற்றிய கேள்விக்கு பதில் கூறி இருக்கிறார். ஒரே வயதுடைய நபருடன் டேட்டிங் செல்ல மாட்டேன் என குறிப்பிட்ட யாஷிகா அவரை விட வயது அதிகமானவர் தான் வேண்டும் என கூறி இருக்கிறார்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்
மேலும் திருமணமா அல்லது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா என கேட்டதற்கு "நான் திருமணம் செய்ய விரும்புபவருடன் லிவ்இன்-ல் இருக்க விரும்புகிறேன். திருமணத்திற்கு முன்பே அவரை பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது" என யாஷிகா கூறி இருக்கிறார்.