நான் சொன்னதை அப்படியே சொல்றான்.. நிரூப் உடன் காதல் பிரேக்கப் பற்றி பேசிய யாஷிகா
யாஷிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் நிரூப் பற்றி பேசி இருக்கிறார்.
யாஷிகா - நிரூப்
நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலம். அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன் பிறகு பிக் பாஸ் 5ம் சீசனில் யாஷிகாவின் முன்னாள் காதலர் என்கிற அடையாளத்தோடு நிரூப் என்பவர் போட்டியாளராக வந்தார். அவரும் அதிகம் பாப்புலர் ஆன நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவர் களமிறங்கி இருக்கிறார்.

நான் சொன்னதை அப்படியே பேசி இருக்கிறான்
பிக் பாஸ் வீட்டில் நிரூப் இருந்தபோது அவர் காதல் கதையை கூறி இருந்தார். 'யாஷிகா உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம், ஆனால் தற்போதும் நாங்கள் நண்பர்களாக பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்' என கூறி இருக்கிறார்.
சமீபத்தில் நிரூப் அளித்த பேட்டி ஒன்றிலும் இதையே தான் கூறி இருந்தார். இது பற்றி தற்போது யாஷிகாவிடம் பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். "நான் சொன்னதை அப்படியே அப்படியே பேசி இருக்கிறான்" என யாஷிகா கூறி இருக்கிறார்.
அதனால் அவர்கள் காதல் கதை உண்மை தானா.. இல்லை பிக் பாஸ் ஷோவுக்காக சொல்லப்பட்ட ஒன்றா என்கிற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று