இது அரபிக் குத்து இல்ல, முரட்டு குத்து.. யாஷிகா டான்ஸ் வீடியோவை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்
நடிகர் விஜய்யின் அரபிக் குத்து டான்ஸ் தான் தற்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட். பிரபலங்கள் பலரும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதில் பல வீடியோக்கள் அதிகம் ட்ரெண்ட் ஆகியும் வருகின்றன.
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செம கவர்ச்சியான உடையில் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் 'ஆஹா' என வாய்பிளந்தாலும், ஒரு தரப்பினர் அவரது உடையை பற்றி மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய அவரா இப்படி என ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் போட்டிருக்கும் கமெண்டுகள் சில இதோ..
"இது அரபிக் குத்து இல்ல, முரட்டு குத்து" என யாஷிகாவின் முதல் படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை பற்றி குறிப்பிட்டு கமெண்ட் செய்து இருக்கிறார்.
