கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை... புகைப்படத்துடன் இதோ
யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அந்த படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டிபோட்டு மக்களின் கவனம் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இந்த விபத்து பரபரப்பாக பேசப்பட்டது.
3 மாதங்கள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட யாஷிகா பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.

போட்டோ
படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார்.
அதாவது Pickleball விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu