விஜய் மற்றும் த்ரிஷா பற்றி அப்படி பேசினேனா? சர்ச்சைக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்

By Parthiban A Jun 08, 2026 05:52 PM GMT
Report

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கவர்ச்சியாக கடற்கரையில் போட்டோஷூட் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பொது இடத்தில் அரைகுறை ஆடையில் இப்படி போட்டோஷூட் எடுத்தால் முதல்வர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என ஒரு நபர் குற்றம்சாட்டியது போலவும், அதற்கு யாஷிகா உடனே த்ரிஷா பெயரை குறிப்பிட்டு 'அவருடன் பிஸியாக இருக்கிறார்’  என பதில் கொடுத்தது போலவும் ஒரு screenshot இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சர்ச்சைக்கு யாஷிகா தற்போது X தளத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

விஜய் மற்றும் த்ரிஷா பற்றி அப்படி பேசினேனா? சர்ச்சைக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம் | Yashika Clarify Viral Screenshot Cm Vijay Trisha

விளக்கம்

"தற்போது பரப்பப்பட்டு வரும் ஒரு விஷயம் முற்றிலும் பொய்யாக உருவாக்கப்பட்டது. இப்படி செய்து என்னை கீழே தள்ளி, அவர்களது சமூக வலைதள பக்கத்திற்கு popularity தேடுகிறார்கள். நான் தவறான ஒரு பொருளை பயன்படுத்துவதாக முன்பு ai புகைப்படத்தை பரப்பினார்கள்."

"அது போல இதுவும் ஒரு குப்பை தான். இதை பொருட்படுத்தாதீர்கள், லைக்குகள் வாங்க மோசமான செயலை செய்யும் பக்கங்களை நம்பாதீர்கள்" என யாஷிகா பதிவிட்டு இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US