இதுதான் நான் உன்னை கடைசியாக எடுத்த போட்டோ- வருத்தத்துடன் இறந்த தோழியின் புகைப்படத்தை போட்ட யாஷிகா
பிக்பாஸ் 2வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் களமிறங்கி நன்றாக விளையாடியவர் யாஷிகா. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஒரு படம் நடித்து மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார்.
அவர் நிகழ்ச்சியில் சாதனை செய்வார் என எதிர்ப்பார்த்தால் அது எதுவும் நடக்கவில்லை.
நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள் அதிகம் கமிட்டாகி வந்த அவர் அண்மையில் பெரிய விபத்தில் சிக்கியது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அவர் கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்பட்டதில் உடன் இருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த சோகத்தில் இருந்து யாஷிகா இன்னும் வெளியே வரவில்லை. இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது தோழி பவானியை கடைசியாக எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து, இதுதான் உன்னை கடைசியாக எடுத்த புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.
