இரண்டு பேர் மரணமா..! என் இதயம் உடைந்தது, நடிகை யாஷிகா அதிர்ச்சி
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார்.
இதையெல்லாம் விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், பெரிதளவில் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா சென்ற கார் விபத்திற்குள்ளாகி, யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பேரஷன் எல்லாம் முடிந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் யாஷிகா ஆனந்த், மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, மிஸ் கேரளா பட்டம் வென்ற Ansi Kabeer மற்றும் மிஸ் கேரளா ரன்னர் அப் Anjana Shajan இருவரும் கார் விபத்தில் இருந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

