சமந்தாவிற்கு சண்டை பயிற்சி கொடுத்த இயக்குனர்.. வெளிவந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்
சமந்தா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பிஸியான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஹரீஷ் நாராயணன் மற்றும் கே. ஹரி ஷங்கர் என இரு இயக்குனர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக யசோதா படத்தில் சண்டை காட்சியில் மிரட்டியுள்ளார் என்பது ட்ரைலரை பார்க்கவும் பொழுது தெளிவாக தெரிகிறது.
சண்டை பயிற்சி புகைப்படங்கள்
இந்நிலையில், இப்படத்தில் யானிக் பென் எனும் ஆக்ஷன் இயக்குனர் தான், சமந்தாவின் சண்டை பயிற்சியை வடிவமைத்துள்ளார்.
யானிக் பென் ஆக்ஷனில் சமந்தா அசத்தியுள்ள படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..


