அன்று எஸ்.பி.பி! இன்று ரஜினி! இதுவரை வெளியே தெரியாத விசயம்! கண்ணீர் விட்டு சொல்லி அழுத பிரபலம்! அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும்!
சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது குறித்து வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதுதான் தற்போது அரசியல், ஊடக வட்டாரத்தில் கார சாரமான விவாதம் எனலாம்.
உடல் நிலை காரணம் கருதி அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தது பலருக்கும் அதிர்ச்சி என்றாலும் அவரின் இந்த எண்ணம், உண்மையாகவே அவரின் நலன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி எனலாம். ஆனால் சமூக வலைதளங்களில் அவரை தரக்குறைவாக பேசுவது ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் அளித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா, ரஜினியின் நண்பனாக பல விசயங்களை பேசியுள்ளார். இதில் அவர் ரஜினியுடன் நண்பனாக நிறைய சண்டை போட்டிருக்கிறேன். என் நண்பன் ரஜினி இமயமலையின் உச்சி. அதற்கு மேல் ஒன்றுமில்லை. கலைஞர்கள் களம் என்பது வேறு, அரசியல் சூதாட்டக் களம் என்பது வேறு.
ஹைதராபாத் படப்பிடிப்புக்கு போனவர் அங்கு 6 பேருக்கு கொரோனா பாதிப்பு. உன் வயதென்ன? மருத்துமனையில் உன்னை அனுமதித்தார்கள். எஸ்.பி.பியை மருத்துமனையில் பார்த்தேன். அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும். நண்பனை இழந்த வலி. உன்னுடன் இருப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம் அது வேறு. உன் வலி, வேதனை உன் உடம்புக்கு தான் தெரியும்.மனதுக்கு மட்டும் தான் தெரியும்.
தலைவா நீ எட்டாத உயரமில்லை. இனியும் உனக்கு அரசியல் தேவையா. மன நிம்மதி தான் தேவை. பிறப்பு ஒருமுறை தான். நீ பெரிய ஆன்மீகவாதி. கடவுள் உனக்கு எல்லா அனுக்கிரகங்களையும் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் நீ எங்கு செல்ல வேண்டும். தயவு செய்து அரசியலுக்கு வருவது குறித்து யோசி என்று சொல்லி அழுதேன். என் ரஜினி என் நண்பனாக கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று கண்ணீருடன் சொன்னேன். அவனுக்கும் அதே உணர்வு இருந்தது.
இப்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறார். சரியான முடிவு. இது சாதாரணமானது அல்ல. அவன் எளிதில் முடிவெடுக்க மாட்டான்.
ஆன்மீகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்திருக்கியாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய். ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரனல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல. கன்னடன் அல்ல. நீ தமிழன். அதை இப்போது ஒப்புக்கொள்வேன்.
யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம். உன் உயிர் முக்கியம். ரசிகர்களுக்கு நீ முக்கியம் என பாரதிராஜா கூறியுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri