மனைவி நந்தினியின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய கணவர் யோகேஷ்.. இன்ப அதிர்ச்சியில் நந்தினி
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை மைனா.
இவர், வெள்ளித்திரையில் வெளியான, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் பங்கேற்று வருகிறார்.
இதில் சென்ற வாரம், தொடர்ந்து நடக்கும் போட்டிகளை ஜெயிக்கும் கணவர்கள், தங்களது மனைவிகளுக்கு பரிசு கொடுக்க வேண்டும்.
அதில், தனது மனைவி மைனாவிற்கு சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில், மைனாவின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் யோகேஷ்.
மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் நடிகை மைனா நந்தினி.
இதோ அந்த புகைப்படம்..