தல அஜித் குறித்து ஓப்பனாக பேசிய யோகிபாபு - என்ன சொன்னார் தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறியுள்ளார் நடிகர் யோகி பாபு.
இவர் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான மாடெலா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் யோகி பாபு தல அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில்
" வீரம், வேதாளம், விஸ்வாசம், இப்போ வலிமை என அவருடன் நான்கு படங்களில் நடித்துள்ளேன். முதல் 3 படங்களுடைய ஷூட்டிங்கில் என்னிடம் அவர் அடிக்கடி யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை-னு கேட்டுட்டே இருப்பார்.
"நான் பொண் பார்க்குறேன். பொண்ணுதான் என்னை பார்க்கமாட்டிங்குது-னு சொன்னேன். கவலைப்படாதே, சீக்கிரம் உனக்கு கல்யாணம் ஆகும் பாரு-னு சொன்னார் அஜித் சார் ".
" வலிமை படத்தின் படப்பிடிப்பில் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு கட்டிப் பிடிச்சு, குடும்பம்தான் முக்கியம்-னு நிறைய அறிவுரை சொன்னார் ". என அஜித் குறித்து பேசியுள்ளார் யோகி பாபு.