சாமி விஷயம், இது தொடர்பாக பேச வேண்டாம்.. நடிகர் யோகி பாபு பதிலடி
நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். ஆன்மீகத்தில் மிகுந்த பற்று கொண்ட யோகி பாபு ஒவ்வொரு படம் முடிந்த பின் கோயில் கோயிலாக சென்று வருவதை நம்மால் காண முடிகிறது.
அதோடு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருப்பார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
யோகி பாபு பதிலடி
அதாவது, நாளுக்கு நாள் உங்கள் கையில் கயிறு அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்று கேட்க, அதற்கு, "இது சாமி விஷயம். மேலும், இது தேவையற்ற கேள்வி.
நீ இல்லை, நான் இல்லை நம் முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது. இது தொடர்பாக பேச வேண்டாம்" என நச்சென்று பதிலளித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
