சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் கடந்த வருடம் பெரிய அளவில் ஹிட் ஆனது. நல்ல வசூல் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது.
நெல்சனின் முந்தைய படம் பீஸ்ட் விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு கம்பேக் ஆக அமைந்தது. அதே போல ரஜினிக்கும் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் வெற்றி பெரிய உத்வேகத்தை கொடுத்தது.
ஜெயிலர் 2
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை நெல்சன் தொடங்கி செய்து வருகிறார். ஜெய்லரில் ரஜினியை கலாய்த்து காமெடி செய்யும் வகையில் படத்தில் காமெடியனாக வந்த யோகி பாபு இரண்டாம் பாகத்திலும் நடித்து இருக்கிறார்.
யோகி பாபு தற்போது சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 பற்றி பேசி இருக்கிறார். "ஜெயிலர் 2ல் நெல்சன் புதுவிதமாக ஒரு விஷயத்தை செய்கிறார். அது பெரிய அளவில் காமெடியாக இருக்கும்" என கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ..

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
