திருச்செந்தூர் கோவிலில் நடிகர் யோகி பாபு.. ஜெயிலர் படம் குறித்து கொடுத்த மாஸ் அப்டேட்
யோகி பாபு
நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது குட் பேட் அக்லி, Medical Miracle, ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
ஆன்மீகத்தில் மிகுந்த பற்று கொண்ட யோகி பாபு அவருடைய ஒவ்வொரு படம் முடிவுக்கு பின்பும் கோயில் கோயிலாக சென்று வருவதை நம்மால் காண முடிகிறது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திருச்செந்தூர் முருகப்பெருமான் எனக்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகிறார்.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறேன்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக வந்துள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.