ரூ.7 லட்சம் கேட்ட சர்ச்சை.. யோகி பாபு மேடையிலேயே காட்டமான பதிலடி
நடிகர் யோகி பாபு தான் நடித்த கஜானா என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என அதன் தயாரிப்பாளர் மேடையில் பேசியது சர்ச்சை ஆனது.
ப்ரோமோஷனுக்கு வர 7 லட்சம் ரூபாய் கேட்கிறார் யோகி பாபு, அவர் நடிகராக இருக்கவே தகுதி இல்லாதவர் என அந்த தயாரிப்பாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
எவ்ளோ பேரு சம்பள பாக்கி தெரியுமா..
இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகி பாபு தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"என் சம்பளத்தை நான் fix செய்வதில்லை. வெளியில் இருப்பவர்கள் தான் fix செய்கிறார்கள். என் சம்பளம் எவ்ளோனு எனக்கே தெரியாது. இப்படி ஒரு நிலையில் தான் போய்ட்டு இருக்கேன்."
"பேசின சம்பளத்தை கேட்டால் தான் இங்கே எதிரி ஆகிவிடுகிறோம். யார் வேணாலும் என்ன வேணாலும் பேசுறாங்க."
"என்னிடம் அசிஸ்டன்ட் ஆக 3-4 வருடம் உடன் இருந்த தம்பி ஒருவன் ஹீரோவாக நடிக்க போகிறேன் என கூறினான். நல்ல விஷயம்டா போய் பண்ணு என கூறி அனுப்பினேன். அந்த படத்தில் இரண்டு நாள் நான் நடிக்க வேண்டும் என கேட்டான். சரிடா ஓகே என கூறினேன்."
லிஸ்ட் எடுத்து கொடுக்கவா..
"அந்த படத்துக்கு தான் நான் 7 லட்சம் கேட்டேன், 8 லட்சம் கேட்டேன்னு சொன்னாங்க. எனக்கு எவ்ளோ பேர் பணம் தரணும் தெரியுங்களா. லிஸ்ட் எடுத்து கொடுக்கவா."
"இப்படி எல்லாம் பேசாதீங்க. உங்களை சப்போர்ட் பண்ணி தான் நான் போயிட்டு இருக்கேன்" என யோகி பாபு காட்டமாக பேசி இருக்கிறார்.
நடித்ததற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டதற்கு தான் அந்த தயாரிப்பாளர் பட விழாவில் யோகி பாபுவை பற்றி மோசமாக பேசி இருக்கிறார் என தற்போது யோகி பாபு கொடுத்த விளக்கத்தால் உறுதியாகி இருக்கிறது.

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
