சிம்பு தேவன் இயக்கியுள்ள போட் படத்தின் முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு தெரியுமா
சிம்பு தேவன்
நகைச்சுவை என்பது சாரதானமான விஷயம் இல்லை. அதை திரையில் சரியாக வழங்கவில்லை என்றால் அதுவே சீரியஸான படமாக மாறிவிடும். அப்படி நகைச்சுவையில் அசத்தும் இயக்குனர்களில் ஒருவர் சிம்பு தேவன்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்கள் எப்போதும் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது.
போட்
இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் போட். யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், போட் படத்தை பார்த்துவிட்டு பிரபல மூத்த முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி. ஸ்ரீராம் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
முதல் விமர்சனம்
இதில் "சிம்பு தேவனின் போட் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்திய சினிமாவில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும். மிகவும் அழகாக அனுபவம்" என கூறியுள்ளார்.
இதன்மூலம் போட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கண்டிப்பாக வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவரவிருக்கும் போட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
