ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் யோகி பாபு.. யார் இயக்குனர் தெரியுமா
யோகி பாபு
நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். ஆனால் தற்போதும் நான் ஹீரோ எல்லாம் இல்லை, காமெடியன் மட்டும் தான் என அவர் விளக்கம் கொடுத்து வருகிறார்.
ஹாலிவுட்டில் என்ட்ரி
இந்நிலையில்,யோகி பாபு 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்தில் முதன் முறையாக நடிக்க உள்ளார். இப்படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல இயக்குனர் டெல் கே.கணேசன் இயக்குகிறார்.
இதில், ஆங்கில ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சியில் யோகி பாபு நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
இந்த 'டிராப் சிட்டி' படத்தில் யோகி பாபுவை இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டிற்கு கணேசன் அறிமுகப்படுத்த உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
